10 நவம்பர், 2011

ஏன் இன்டிசைன்...?

ஏன் இன்டிசைன்...?

கணினி வரைகலையில் குறிப்பாக புத்தக வேலைகளுக்கான பக்க வடிவமைப்பிற்காக பயன்பாட்டில் இருந்துவந்த, தற்போதும் பயன்படுத்திக் கொண்டுள்ள அடோபி நிறுவனத்தின் பேஜ்மேக்கர் மென்பொருளில், ஏராளமான குறைபாடுகள் உள்ளன. இவற்றையெல்லாம் களைந்து, இன்னும் அதிகமான வசதிகளுடன் உருவாக்கப்பட்டதே இந்த இன்டிசைன் மென்பொருளாகும்.

பக்க வடிவமைப்பு மட்டுமல்லாமல், வெக்டார் வகையிலான படங்களையும் உருவாக்க இந்த இன்டிசைன் மென்பொருளில் பல வசதிகள் உள்ளன. அத்துடன் தலைப்பு எழுத்துக்களை அழகுபடுத்துவது, பின்புலனாக வண்ணங்களை நிறுத்துவது உள்ளிட்ட ஏராளமான, வரைகலை அம்சங்கள் இன்டிசைனிலேயே கொடுக்கப்பட்டுள்ளன.

அச்சுத்துறைக்கென்றே, அச்சுத்துறைக்குத் தேவையான, அதில் பயன்படுத்தப்பட்டுவரும் பல்வேறு அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளதாகவும் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக அச்சுத்துறையில் தற்போது புழக்கத்தில் உள்ள பாலிமாஸ்டர் வேலைகளிலிருந்து கம்ப்யூட்டர் டூ பிளேட் வகையான வேலைகள் அல்லாமல், நேரடியாக கம்ப்யூட்டர் டூ பிரிண்ட் தருகின்ற டிஜிட்டல் பிரிண்டிங் வரையிலான வேலைகளும் செய்யப்படுகின்றன. இவை அனைத்திற்கும் ஏற்ற பல செயல்பாடுகள் இன்டிசைனில் உள்ளன.

அத்துடன் தற்போது பெரிய அளவில் பேசப்படுவதுடன், செயல்பாட்டிலும் கொண்டுவரப்பட்டுள்ள ஈ-பப்ளிகேஷன் எனப்படும் மின் பதிப்பு முறைக்குத் தேவையான மின்னூல்களை (-புக்ஸ்) உருவாக்குவதற்கு வேண்டிய பல்வேறு வசதிகள் இந்த இன்டிசைனில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த மின்னூலுக்கு அடிப்படையான போர்டபிள் டாக்குமென்ட் ஃபார்மேட் எனப்படும் பீடிஎஃப் வகை கோப்புகளை உருவாக்குவது என்பது இன்டிசைனில் மிகவும் எளிமைபடுத்தப்பட்டுள்ளது. அதற்காக சிறப்புக் கட்டளைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனந்தவிகடன் குழுமத்தின் அனைத்து இதழ்கள் மற்றும் குமுதம் உள்ளிட்ட பல்வேறு வார இதழ்களும், தினகரன், தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களும் தற்போது இன்டிசைனை பயன்படுத்தியே தங்களது வடிவமைப்பை செய்து முடிக்கின்றனர். மேலும் சென்னையில் கணினி வரைகலை வடிவமைப்பாளர்களிடையே இந்த இன்டிசைன் பெரிய அளவில் புழக்கத்தில் உள்ளது.

2000ஆவது வருடத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இன்டிசைனின் 1வது பதிப்பைத் தொடர்ந்து தற்போது 6வது பதிப்பு இன்டிசைன் சிஎஸ்4 என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ளது. அத்துடன் இதன் 10ஆவது ஆண்டு நிறைவில், 12-04-2010 அன்று 7வது பதிப்பு சிஎஸ் 5 என்றும் வெளியிடப்பட்டு இப்போது சிஎஸ்6 பதிப்பு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அச்சுத்துறைக்கான பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ள இந்த இன்டிசைனை முறையாக பயின்று பலனடைவதற்காகவே நமது பயிலகம் மூலம் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

இந்தப் பயிற்சியின் முடிவில், தற்போது பயன்பாட்டில் உள்ள பேஜ்மேக்கர் மற்றும் கோரல்டிரா ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து இன்டிசைனை மட்டும் பயன்படுத்த முடியும்.

தற்போது பயன்பாட்டில் உள்ள மென்பொருளில் உள்ள குறைபாடுகள் :

- அதிக பக்கங்கள் உள்ள வேலையை சேவ் செய்து வைத்திருந்தால், மறுபடியும் துவக்கம்போது, தொல்லை தருகிறது.

- தானாக பக்க எண்கள் அமைப்பு கொடுப்பது கடினமானது.

- ஒரே வேலையில் வேறு வேறு தொடர்ச்சியான பக்க எண்கள் வரவழைப்பது இயலாது.

- ஒரு முறை நிறுத்திய படத்தை மாற்றுவதற்கு, அல்லது மாற்றங்கள் கொடுப்பதற்கு அதனை டெலிட் செய்துவிட்டு மீண்டும் இம்போர்ட் செய்தே நிறுத்த வேண்டும்.

- நமது வேலையில் உள்ள தவறுகளை அறிய முடியாது.

- வேரியபிள் டேட்டா என்பது மிகவும் குறைவான அளவிலேயே செயல்படுகிறது. இதனால் அடையாள அட்டை போன்ற புகைப்படங்களை இணைக்கும் வேலைகளைச் செய்ய முடிவது இல்லை.

- திரையில் காட்டப்படும் வண்ணங்களும் அச்சில் கிடைக்கும் வண்ணமும் வேறுவேறாக உள்ளன.

- -புக் எனப்படும் மின்னூல் உருவாக்கத்திற்குத் தேவையான பல வசதிகள் கிடையாது. பீடிஎஃப்பாக மட்டும் மாற்ற முடியும். அனிமேஷன் வசதிகள் கொடுக்க முடியாது.

- இணையப் பக்க வடிவமைப்பிற்காக செயல்படுவது சிரமம்.

- ஆட்டோபேக்கப் மற்றும் பேக்கப் நடக்கும்போது வேறு செயல்களைச் செய்ய முடியாது.

- பேக்கப் நடக்கும்போது மின்தடை ஏற்பட்டால் ஃபைலே கரெப்ட்டாகிவிடுவதும் உண்டு. அதாவது செய்து வைத்த வேலை முற்றிலுமாகக் கொட்டுப் போகிறது.

- இரவு வேலையை முடித்துவிட்டு மறுநாள் காலை ஃபைலைத் துவக்கினால் வெள்ளையாக ஒரு பக்கம் மட்டுமே காட்டப்படும் நிலை பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஃபைல் சைஸ் அதே அளவு உள்ளது.

- வேலை செய்து கொண்டிருக்கும்போது டெர்மினேட் ஆனால், அதுவரை செய்தவை டெலிட் ஆகிவிடுகின்றன.

இதுபோன்ற தொல்லைகள் எதுவும் இன்டிசைனில் கிடையாது.

குறிப்பு : நாம் இன்டிசைனை சந்தைப்படுத்துவதற்காகவோ, விளம்பரப்படுத்து வதற்காகவோ அதற்குப் பரிந்து பேசவில்லை. எங்களது புத்தகங்கள் தயாரிப்பு மற்றும் பிற வடிவமைப்புகளை இன்டிசைனிலேயே தயாரிக்கின்றோம். எளிமையாகவும் முழுமையாகவும் உள்ளது. யாமறிந்த மென்பொருட்களில் இன்டிசைனைப் போல எளிதானதெங்கும் காணோம் என்பதாலும், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கத்தினாலும் இதனைக் கொடுக்கின்றோம்.

வடிவமைப்பாளர்கள் கிடைக்காத இந்த நாட்களில், உரிமையாளர்கள் எளிதாக பயிலுவதற்கு இதுவே மிகப் பொருத்தமான மென்பொருளாகும்.

29 செப்டம்பர், 2011

பார்கோடு - BarCode


பார்கோடு

அடிப்படைச் செய்திகள்


வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தின் வெளிப்பாடுதான் “பார்கோடு” எனப்படும் வசதியாகும். நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கையும், அளவும் அதிகரித்துவரும் இந்த நாட்களில், சந்தையில் அவற்றை கையாளும் ஆட்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது. அதாவது விற்பனை நிலையங்களில் வேலைபார்க்க சரியான எண்ணிக்கையில் ஆட்கள் கிடைப்பது இல்லை. ஆனால் பரிமாற்றம் மட்டும் அதிகரித்து வருகிறது. எனவே குறைவான எண்ணிக்கையில் உள்ள மனித சக்தியை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இதனால் மனித சக்திக்குத் துணையாக கணினி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

கணினி தொழில்நுட்பம்


ஒரு பொருளின் அளவு, விலை மற்றும் கையிருப்பு ஆகியவற்றை கணினியில் உட்செலுத்தி வைத்துக் கொண்டு தேவையானபோது மட்டும் அதனை பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. வடிவமைப்பில் - குறிப்பாக பேக்கேஜிங் துறைக்கான வடிவமைப்பில் - இந்த பார்கோடுகளை பற்றி அறிந்திருப்பதும் பயன்படுத்துவதும் அவசியமாகிறது. பார்கோடுகளை உருவாக்குவதற்கென தனியான மென்பொருளும், அவற்றை உருவாக்கிக் கொடுக்கும் சேவை நிறுவனங்களும் இருக்கின்றன. பொதுவாகத் தயாரிப்பாளர்கள் இவர்களிடமிருந்தே பார்கோடுகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். எனினும் கணினி வடிவமைப்பில் பெருமளவு பயன்படுத்தப்படும் கோரல்டிரா மென்பெருளிலும் இந்த பார்கோடை உருவாக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் முறையாக உங்கள் கம்ப்யூட்டரில் கோரல்டிரா மென்பொருளை பதிவு செய்யும் பொழுது முழுமையாக, இந்த பார்கோட் பகுதியையும் சேர்த்து பதிவு செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் இந்தக் கட்டளை மங்கிய நிலையிலேயே காணப்படும்; செயல்படாது.



பார்கோடு உருவாக்கம்


இந்தக் கட்டளையை செலக்ட் செய்தவுடன் முதல் டயலாக் பாக்ஸ் வருகிறது
பாகம் 1 ஆகக் காட்டப்பட்டுள்ள பகுதியில் உள்ள ட்ராப் டவுன் லிஸ்ட்டில் பல முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் தேவையான முறையை (Industry Standard Format) செலக்ட் செய்யுங்கள். (இந்தியாவில் பொதுவாக EAN-8, EAN-13 ஆகிய இரண்டு முறைகளே பெரும் அளவில் பயன்படுகின்றன. அதாவது எட்டு இலக்கங்கள் அல்லது 13 இலக்கங்கங்களை உடைய குறியீட்டு எண்களை மட்டுமே இங்கு பயன்படுத்துகின்றோம். எனினும் இதில் கொடுத்துள்ள முறைகள் பற்றிய தெளிவான விவரங்களை அறிந்து பயன்படுத்த வேண்டும்.) இங்கு EAN-8 என்ற முறையை செலக்ட் செய்துள்ளோம். இந்த முறையில் கொடுக்க வேண்டிய எண்களை பாகம் 2ல் உள்ள டெக்ஸ்ட் பெட்டிகளில் கொடுக்கவும். தவறாகக் கொடுத்தால் எச்சரிக்கை வந்து நிற்கும்.
பாகம் 3ல் உள்ள சாம்பிள் ப்ரீவ்யூ பெட்டியில் நாம் செலக்ட் செய்துள்ள முறையின் மூலம் கிடைக்கவுள்ள பார்கோடின் வடிவம் காட்டப்படுகிறது. இதனை ஒப்புநோக்கி வேறு வடிவம் தேவையெனில் பாகம் 1ல் வேறு முறையை செலக்ட் செய்து கொள்ளவும். நெக்ஸ்ட் பட்டனை செலக்ட் செய்தால் அடுத்தடுத்து டயலாக் பாக்ஸ்கள் வருகின்றன.
இவற்றில் அச்சிடும் பொழுது இருக்க வேண்டிய தரம் மற்றும் பிற தன்மைகள் பற்றிய விவரங்கள் கேட்கப்படுகின்றன. பார்கோடுகள் பற்றிய முழு செய்திகளையும் அறிந்து கொண்டு, வேலையின் தன்மைக்கு ஏற்ப இதில் உள்ள வசதிகளை மாற்றிக் கொடுத்து கடைசியாக வருகின்ற டயலாக் பாக்ஸில் ஃபினிஸ் கொடுத்து முடித்தால், குறிப்பிட்ட முறையில் உங்களது தேவைக்கேற்ற பார்கோடு நிறுத்தப்படுகின்றது. இதனை அளவில் மாற்றம் செய்து பயன்படுத்தலாம். பார்கோடுகள் அவற்றை படித்து அறிகின்ற பார்கோடு ரீடர்களில் சிறப்பாக செயல்பட, தரம் முக்கியமாக தேவைப்படுகிறது. தரம் குறைவானால் தவறான தகவல்கள் தரப்பட்டுவிடும். பார்கோடுகள் பொதுவாக இடமிருந்து வலமாகவே பார்கோடு ரீடர்களால் படிக்கப்படுகின்றன. எனவே பார்கோடுகள் உயரமாக இருக்க வேண்டியது இல்லை. அதற்காக நாமாக அகலத்தை பெரிதுபடுத்துவதும் கூடாது. முழுமையான விவரம் அறிந்து செயல்படவேண்டிய மிக முக்கியமான பகுதி.



பல்வேறு வகையான பார்கோடுகள்

சிலவகையான பார்கோடுகளை கீழே காண்க.
EAN-8 (7 எண்களை நாம் கொடுக்க, 8வது எண் தானாகக் கொடுக்கப்படுகிறது.)
EAN-8 (கூடுதலாக 5 எண்கள் கொடுக்கலாம்.)
EAN-13 (12 எண்களை நாம் கொடுக்க, 13வது எண் தானாகக் கொடுக்கப்படுகிறது.)

EAN-13 (கூடுதலாக 5 எண்கள் கொடுக்கலாம்.)

ISBN 978 prefix (உலகளவிலான புத்தக எண் - 978 என்பது கொடுக்கப்பட்ட நிலையில்)

ISBN (உலகளவிலான புத்தக எண் மட்டும்)
இப்படி பலவகையான பார்கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர இந்திய அஞ்சல் துறையாலும் பார்கோடு பயன்படுத்தப்படுகிறது. அஞ்சல் குறியீட்டு எண்ணை விரைவாகக் கண்டுபிடித்து கடிதங்களை பிரித்தெடுக்க இது உதவுகிறது.

ஜெ.வீரநாதன்

balajiicg@yahoo.com

15 மார்ச், 2011

இன்டிசைன் - ௨ நாள் பயிற்சி வகுப்புகள்

கணினி வரைகலையில் பக்க வடிவமைப்பிற்காக பயன்படுத்தப்படும் அடோபி நிறுவனத்தின் இன்டிசைன் மென்பொருளைப் பழகுவதற்காக இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.



கோய்புத்தூர், பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் நடத்திய இதுபற்றிய மேலும் விவரங்களுக்கு (கீழே உள்ள தொடர்பில் சொடுக்கி) வருகைதர வேண்டுகிறோம் :